மயிலாடுதுறையில், இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
மயிலாடுதுறையில், இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறையில், இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.
மாற்றுத்திறனாளிகள்
2021-2022-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்குரிய மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மயிலாடுதுறை, ராஜன்தோட்டம், இந்திய விளையாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. தடகள போட்டிகளில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீ். ஓட்டம், கை ஊனமுற்றோருக்கு 100 மீ ஓட்டம், குள்ளமானோருக்கு 50 மீ. ஓட்டப்போட்டி நடக்கிறது.
அதேபோல கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல், சக்கர நாற்காலி போட்டிகள் நடைபெற உள்ளன.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
மேலும் மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீ. ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் டென்னிஸ் பந்து எறிதல் ஆகிய போட்டிகளும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், புத்தி சுவாதீனம் முற்றிலும் இல்லாவர்களுக்கும் 50 மீ. ஓட்டம், டென்னிஸ் பந்து எறிதல் மற்றும் நின்ற நிலையில் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளும் நடக்கிறது. குழு விளையாட்டு போட்டியில் கை, கால் ஊனமுற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுபந்து போட்டி ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் நடக்கிறது. இதில் ஒரு அணிக்கு 5 நபர்கள் மற்றும் மேசைப்பந்து போட்டி ஒரு அணிக்கு 2 நபர்கள் கலந்து கொள்ளலாம்.
கண்பார்வையற்ற ஆண்கள், பெண்களுக்கான அடாப்டட் வாலிபால் போட்டியில் ஒரு அணிக்கு 7 நபர்கள் கலந்து கொள்ளலாம். மன நலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எறிபந்து போட்டியில் ஒரு அணிக்கு 7 நபர்கள் கலந்து கொள்ளலாம்.
பரிசு- சான்றிதழ்
தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. மேற்படி குழு போட்டிகளில் முதல் 2 இடங்களை பெறுபவர்களுக்கும், தடகள போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடத்தை பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியானவர் ஆவார்கள். இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் லலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story