பெரும்பாறை அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை


பெரும்பாறை அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 3 May 2022 7:43 PM IST (Updated: 3 May 2022 7:43 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை, அங்குள்ள வீட்டை சேதப்படுத்தியது.

பெரும்பாறை:
பெரும்பாறை அருகே பெரியூர், பள்ளத்து கால்வாய், தடியன்குடிசை, கள்ளக்கிணறு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அந்த யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து வாழை, காபி, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக ஒற்றை காட்டு யானை கள்ளக்கிணறு பகுதியில் உலா வருகிறது. அந்த யானை நேற்று இரவு விவசாயி முத்துப்பாண்டி என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து அங்கு வாழை, காபி, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தது.
மேலும் தோட்டத்தில் இருந்த வீட்டையும் யானை சேதப்படுத்தியது. அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படவில்லை. ஒற்றை காட்டு யானையின் தொடர் அட்டகாசத்தால் கள்ளக்கிணறு கிராம மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
எனவே காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்டி வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story