தினத்தந்தி செய்தி எதிரொலி; பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றம்
கோபால்பட்டி அருகே தினத்தந்தி செய்தி எதிரொலியாக பஸ் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
கோபால்பட்டி:
அதன் எதிரொலியாக நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் நேற்று தி.வடுகபட்டிக்கு செல்லும் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றி வருகின்றனர். இந்த பணி முடிவடைந்தவுடன் திண்டுக்கல்லில் இருந்து தி.வடுகபட்டிக்கு மீண்டும் பஸ் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து கோபால்பட்டி அருகே உள்ள தி.வடுகபட்டிக்கு பல ஆண்டுகளாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த 6 மாதத்திற்கு முன்பு தி.வடுகபட்டி ஊருக்குள் செல்லும் வழியில் சாலையோரத்தில் உள்ள புளிய மரங்களின் கிளைகள் பஸ் மீது உரசுவதாக கூறி, பஸ் சேவை திடீரென்று நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு தி.வடுகபட்டிக்கு பஸ் இயக்கப்படவில்லை. இதனால் அந்த ஊரை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டனர். எனவே பஸ் மீது உரசும் மரக்கிளைகளை அகற்றி, பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தி.வடுகபட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது.
Related Tags :
Next Story