கொடைக்கானலில் ஆலங்கட்டி மழை


கொடைக்கானலில் ஆலங்கட்டி மழை
x
தினத்தந்தி 3 May 2022 8:48 PM IST (Updated: 3 May 2022 8:48 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது.

கொடைக்கானல்:
‘மலைகளின் இளரவசி’யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவுகிறது. கோடைகாலம் தொடங்கியதில் இருந்து கொடைக்கானலில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து கொடைக்கானலில் மழை வருவதற்கான சூழல் ஏற்பட்டது. அதன்பிறகு மாலை 6 மணிக்கு மேல் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சிறிது நேரத்தில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
அப்போது ஆலங்கட்டிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் சேகரித்தனர். சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ந்து அடைந்தனர்.

Next Story