கயத்தாறு அருகே ரம்ஜான் தொழுகை நடத்தும் பகுதியில் சலசலப்பு
கயத்தாறு அருகே ரம்ஜான் தொழுகை நடத்தும் பகுதியில் இருதரப்பினருக்கு இடையே பிரச்சினை உருவானதால் சலசலப்பு ஏற்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே மானங்காத்தான் கிராமத்தில் இருந்து ஆத்திகுளம் கிராமத்தில் ஊரின் மேற்குப் பகுதியில் முஸ்லிம்களின் தர்கா உள்ளது. இங்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொடி ஏற்றி தொழுகை நடத்தியவிட்டு, முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஆத்திகுளம் கிராமத்தில் இருக்கும் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமி காந்தன் அங்கு தொழுகை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட மதசார்பு அலுவலகத்தில் புகார் மனுகொடுத்துள்ளார். இதற்கு முஸ்லிம்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இருதரப்பினரிடமும் கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலிப் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து வழக்கம் போல் குறிப்பிட்ட இடத்தில் கொடி ஏற்றி தொழுகை நடத்திய பின், முஸ்லிம்கள் ஒரு கிலோ மீட்டர் ஊர்வலமாக பள்ளிவாசலுக்கு சென்றனர். அங்கும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
Related Tags :
Next Story