போடி அருகே கிணற்றில் விழுந்த நாய்கள் மீட்பு


போடி அருகே கிணற்றில் விழுந்த நாய்கள் மீட்பு
x
தினத்தந்தி 3 May 2022 8:55 PM IST (Updated: 3 May 2022 8:55 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே கிணற்றில் விழுந்த நாய்கள் மீட்கப்பட்டன.

போடி:
போடி அருகே உள்ள ராசிங்காபுரம்‌ சமத்துவபுரத்தை சேர்ந்தவர் நாகையாசாமி. விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை 2 நாய்கள்‌ தவறி விழுந்து விட்டன. இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி வலை போட்டு நாய்களை மீட்டனர்.


Next Story