விஷ மாத்திரை தின்று பெயிண்டர் சாவு
விஷ மாத்திரை தின்று பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
போடி:
போடி எண்ணெய்காரமுத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 47). பெயிண்டர். இவர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு அவர் வீட்டில் இருந்த விஷ மாத்திரையை தின்றார். மேலும் இதுகுறித்து உப்பார்பட்டியில் வசிக்கும் தனது மகள் தீபாவுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.
இந்தநிலையில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெற்றிவேல் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story