காங்கயம் அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதர சீர்கேடு


காங்கயம் அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதர சீர்கேடு
x
தினத்தந்தி 3 May 2022 9:36 PM IST (Updated: 3 May 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

காங்கயம் அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதர சீர்கேடு

காங்கயம்:
காங்கயம் அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதர சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அவற்றை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளாஸ்டிக் கழிவுகள்
காங்கயத்தை அடுத்துள்ள நால்ரோடு - கீரனூர் செல்லும் இந்த பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சாலையோரத்தில் மர்ம ஆசாமிகள் சிலரால் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதில் சுற்று சூழலை பாதிக்கும் வகையிலான பிளாஸ்டிக் சாக்குகள், பாலிதீன் பைகள், குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் அட்டைகள் மற்றும் காய்கறி கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டுள்ளது. இதனால் இங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுசூழல் மற்றும் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் இவ்விடத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது என்றும் மீறினால் தண்டனைக்குள்ளாவீர்கள் என்றும் அறிவிப்பு பதாகைகள் வைத்திருந்தும் அதை கண்டுகொள்ளாமல் இந்த பதாகையின் அருகே மீண்டும் மீண்டும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. 
உரிய நடவடிக்கை
இதனால் இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து இங்கு கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும். 
மேலும் சாலையோரத்தில் இதுபோன்ற பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டாமல் தடுக்கவும், குப்பை தொட்டி ஒன்று இவ்விடத்தில் வைக்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.

Next Story