அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
நாகப்பட்டினம்:
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
நாகையில், நாகை வணிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் குகன் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகதாஸ் ஆண்டறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நாகை கடைத்தெருவில் உள்ள கழிவுநீர் வடிகால்களை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை முழுமையாக தூர்வார நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது. உணவு பாதுகாப்பு துறை உத்தரவின்படி அனைத்து உணவு பொருட்கள் விற்பனை மற்றும் தயார் செய்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும். தஞ்சை-நாகை நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். இல்லையென்றால் நாைக ெரயில் நிலையம் முன்பு அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
...
Related Tags :
Next Story