9 ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு
9 ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு
தாராபுரம்,
போலீஸ் துறையில் பதவி உயர்வுக்கு குறிப்பிட்ட கால அளவு பணியாற்றி சட்டம்-ஒழுங்கை பராமரிப்பில் சிறப்பு பெற்று அவர்கள் மீது எந்த புகாரில் சிக்காதவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாராபுரம் உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் ஏட்டாக பணியாற்றிய தங்கதுரை, தனசேகர், சிவராஜ், பொன்ராஜ், ராஜீ, செல்வம், மண்டோதரி, சுதா, ருக்மணி, தேவி ஆகியோர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ராக பதவி உயர்வு வழங்க தமிழக போலீஸ் துறைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரை செய்தார். அதன்படி இதன் காரணமாக 9 ஏட்டுகளும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றனர்.
அவர்கள் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்று சென்றனர்.
Related Tags :
Next Story