6 பவுன் நகை- ரூ.37 ஆயிரம் திருட்டு
கோட்டூர் அருகே ஊராட்சி துணைத் தலைவர் வீ்ட்டில் 6 பவுன் நகை மற்றும் ரூ.37 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோட்டூர்,
கோட்டூர் அருகே ஊராட்சி துணைத் தலைவர் வீ்ட்டில் 6 பவுன் நகை மற்றும் ரூ.37 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நகை-பணம் திருட்டு
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் கமலதாசன் (வயது56). இவர் குன்னியூர் ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார். நேற்றுமுன்தினம் இரவு கமலதாசன் தனது ஓட்டு வீட்டின் முன்வாசலில் குடும்பத்துடன் படுத்து தூங்கினார். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.37 ஆயிரத்தை
திருடி சென்று விட்டனர்.
நேற்று காலை நகை- பணம் திருட்டுப்போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த கமலதாசன் இது குறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் ஒரு வீட்டில் திருட்டு
மேலும் அதே ஊர் மந்தக்கரை தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(72). நேற்றுமுன்தினம் நள்ளிரவு இவரது வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 10 கிராம் தங்க நகை, வெள்ளிக்கொலுசு, ரூ.1500 ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் போிலும் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் சம்பவ இடத்தை திருத்தறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story