பிரியாணி கடையில் உணவுபரிமாறும் பாத்திரத்தில் இருந்த உணவை எலி ஒன்று உண்ணும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படத்தி உள்ளது.
பிரியாணி கடையில் பாத்திரத்தில் இருக்கும் உணவை எலி உண்ணும் காட்சி
திருவண்ணாமலை
பிரியாணி கடையில் உணவுபரிமாறும் பாத்திரத்தில் இருந்த உணவை எலி ஒன்று உண்ணும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
திருவண்ணாமலை தாலுகாவில் நகரம் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களில் ஏராளமான பிரியாணி கடைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பிரியாணி வைத்து உணவு பரிமாறும் பாத்திரத்தில் இருக்கும் எஞ்சிய உணவை எலி ஒன்று தின்று கொண்டிருந்தது. இதனை செல்போனில் வீடியோ படம் எடுத்தவர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கடையில் பிரியாணி சாப்பிட்டவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.கடைகளை முறையாக பராமரிக்காததால் எலி போன்றவை மக்கள் உண்ணும் உணவை வெளிப்படையாக உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் உள்ள விஷம் அந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு பரவி உடல் நிலை மோசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை மட்டுமன்றி அனைத்து கடைகளிலும் உணவுப் பொருட்கள் மற்றும் உணவு பரிமாறப்படும் பாத்திரங்கள் போன்றவை முறையாக பராமரிக்க படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story