சட்டநாதபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
சட்டநாதபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
சீர்காழி:-
சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் இளங்கோவன், அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் அன்பரசன் வரவேற்றார். கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சிகளில் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் விசாகர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story