சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 101 பேர் சிக்கினர்


சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 101 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 3 May 2022 10:22 PM IST (Updated: 3 May 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 101 பேர் சிக்கினர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர், காரிமங்கலம், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்பனை, மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்ற குற்றத்தில் ஈடுபட்ட 101 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 2,425 மது பாட்டில்கள், 15 லிட்டர் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story