இளம்பெண் மீது திராவகம் வீசிய வழக்கு தலைமறைவான நாகேஷ் பற்றி பரபரப்பு தகவல்கள்
இளம்பெண் மீது திராவகம் வீசிவிட்டு தலைமறைவான நாகேஷ் பற்றி பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது. இதற்கிடையே அவரை தேடப்படும் நபராக அறிவித்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு:
என்னை பற்றிய செய்திகள்...
பெங்களூரு ஹெக்கனஹள்ளி கிராசில் வசித்து வரும் 25 வயது இளம்பெண் மீது தன்னை காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் நாகேஷ் (வயது 29) என்பவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திராவகம் வீசிவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து காமாட்சிபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நாகேசை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாட்டில் நாகேசை தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் இளம்பெண் மீது திராவகம் வீச முன்கூட்டியே நாகேஷ் திட்டமிட்ட பரபரப்பு தகவல் போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது. அதாவது கடந்த 20 நாட்களுக்கு முன்பு நாகேஷ் தனது நண்பர்களிடம் எனக்கு நிம்மதி இல்லை. இதனால் 20 நாட்கள் என்னை யாரும் பார்க்க முடியாது. என்னை பற்றிய செய்திகள் தினமும் பத்திரிகைகளில் வரும் என்று கூறியுள்ளார்.
புகைப்படங்கள் வெளியீடு
மேலும் இளம்பெண் மீது திராவகம் வீசிவிட்டு தப்பி சென்ற பின்னர் பேடர
ஹள்ளியில் உள்ள செல்போன் கடையில் புதிய செல்போன், சிம் கார்டை நாகேஷ் வாங்கி உள்ளார். பின்னர் ஒசக்கோட்டையில் தனது பழைய செல்போனை அவர் வீசிவிட்டு தப்பி சென்று உள்ளார். நாகேஷ் தப்பி செல்லும் போது ரூ.1 லட்சம் எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இன்னும் அவர் புதிய செல்போனை பயன்படுத்தவில்லை. இதற்கிடையே நாகேசை தேடப்படும் நபராக அறிவித்து உள்ள போலீசார் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் அவரது புகைப்படத்தை ஒட்டியுள்ளனர். மேலும் நாகேசின் பல்வேறு முக பாவனை புகைப்படங்களையும் நேற்று போலீசார் வெளியிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story