தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி-முதன்மை நீதிபதி திலகம் தொடங்கி வைத்தார்


தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி-முதன்மை நீதிபதி திலகம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 May 2022 10:22 PM IST (Updated: 3 May 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதன்மை நீதிபதி திலகம் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் ஆனந்த் மேற்பார்வையில், வீரர்கள் பல்வேறு வகையான தீ விபத்து ஏற்படும்போது மேற்கொள்ளவேண்டிய உடனடி நடவடிக்கை, பணியிடங்களில் தீ விபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் வழிமுறை, முதலுதவி அளிக்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் விபத்து வழக்குகள் தீர்ப்பாய மாவட்ட நீதிபதி மணிமொழி, மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத்பர்க்கத்துல்லா, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா, நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ராஜா, முதன்மை சார்பு நீதிபதி கோகுலகிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி கலைவாணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி சாந்தி, சிறப்பு சார்பு நீதிபதி மைதிலி, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் செல்வராஜ், மருது சண்முகம், வனிதா, மதுவர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story