குரங்கு காய்ச்சலுக்கு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பலி


குரங்கு காய்ச்சலுக்கு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பலி
x
தினத்தந்தி 3 May 2022 10:32 PM IST (Updated: 3 May 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

குரங்கு காய்ச்சலுக்கு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பலி

சிவமொக்கா: சாகரில், குரங்கு காய்ச்சலுக்கு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் இறந்துள்ளார்.
 
குரங்கு காய்ச்சலுக்கு... 

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா அரளகோடு கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வந்தவர் ராமசாமி (வயது 55). கடந்த மாதம் (ஏப்ரல்) 24-ந் தேதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து சாகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இருப்பினும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் அவரை மேல்சிகிச்சைக்காக உடுப்பி மணிப்பால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். 
 
பொதுமக்கள் பீதி

இதையறிந்து குடும்பத்தினர், கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். மேலும் பொதுமக்கள் மத்தியில் குரங்கு காய்ச்சல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையே சாகர் சுகதாரத்துறை அதிகாரிகள்  குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 
மேலும் குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story