சேதமடைந்துள்ள முள்ளியாற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா


சேதமடைந்துள்ள முள்ளியாற்றுப்பாலம்  சீரமைக்கப்படுமா
x
தினத்தந்தி 3 May 2022 10:58 PM IST (Updated: 3 May 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே சேதமடைந்துள்ள முள்ளியாற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அருகே சேதமடைந்துள்ள முள்ளியாற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 
முள்ளியாற்று பாலம்
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூர், ஊராட்சி நாட்டு வாய்க்கால் தெரு, பாப்பான் தெரு, கீழத்தெரு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் திருத்துறைப்பூண்டியில் மெயின் ரோடு விளக்குடி, கடைத்தெருவுக்கு வருவதற்கு முள்ளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாகத்தான் வரவேண்டும். ஆனால் இந்த பாலத்தில் கைப்பிடிகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இந்த வழியாக  செல்பவர்கள் தடுமாறி ஆற்றில் விழும் நிலை உள்ளது.
சீரமைக்க கோரிக்கை 
குறிப்பாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை தான் பயன்படுத்த வேண்டும். எனவே விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story