திண்டிவனம் அருகே கிணற்றில் ஆண் பிணம்


திண்டிவனம் அருகே  கிணற்றில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 3 May 2022 11:12 PM IST (Updated: 3 May 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே கிணற்றில் ஆண் பிணம்

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த குருவம்மாபேட்டை தனியார் நிலத்தில் உள்ள கிணற்றில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பிரம்மதேசம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் பிணமாக மிதந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாரேனும் கொலை செய்து உடலை கிணற்றில் வீசிச்சென்றனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story