விவசாயி விஷம் குடித்து தற்கொலை
விவசாயி விஷம் குடித்து தற்கொலை
வேலூர்
வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55), விவசாயி. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதனால் மன வேதனையுடன் காணப்பட்ட நடராஜன் நேற்று விஷம் குடித்து (பூச்சி மருந்து) நிலத்தில் மயங்கி கிடந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story