பொய்கை வாரச்சந்தை ரூ.60 லட்சத்து 90 ஆயிரத்து ஏலம்


பொய்கை வாரச்சந்தை ரூ.60 லட்சத்து 90 ஆயிரத்து ஏலம்
x
தினத்தந்தி 3 May 2022 11:29 PM IST (Updated: 3 May 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

பொய்கை வாரச்சந்தை ரூ.60 லட்சத்து 90 ஆயிரத்து ஏலம்

அணைக்கட்டு

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொய்கையில் செவ்வாய்க்கிழமைதோறும் மாட்டுச்சந்தை மற்றும் காய்கறி சந்தைகள் நடைபெற்று வருகிறது. 

கடந்த 2019-ம் ஆண்டு ஒரு ஆண்டுக்கான ஏலத்தொகை ரூ.1 கோடியே 17 லட்சத்துக்கு ஏலம் போனது. இதனையடுத்து 2020-21-ம் ஆண்டுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஏலம் விடவில்லை. 

இந்த நிலையில் 2022-23-ம் ஆண்டுக்கான பகிரங்க ஏலம் 7 முறை நடந்தது. ஆனால் நிர்வாக காரணங்கள் மற்றும் சராசரி தொகைக்கு கீழ் ஏலம் கேட்கப்பட்டதால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. 

இதனையடுத்து கடந்த 4 வாரங்களாக பொய்கை வாரச்சந்தையில் சுங்கவரியை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வசூலித்தனர். 

இந்த நிலையில் மீண்டும் பொய்கை வாரச்சந்தை ஏலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஆணையாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் வரவேற்றார். 

ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் சதீஷ், பொய்கை ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடேசன், அணைக்கட்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமாரபாண்டியன், வெங்கடேசன், பா.ம.க. மாவட்ட தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஏலம் கேட்க 31 பேர் வந்தனர். ஏலம் விட தாமதமானதால் ஏலத்தை நிறுத்தி விடும்படி அனைவரும் ஆணையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 முடிவில் லோகநாதன் என்பவர் ரூ.60 லட்சத்து 90 ஆயிரத்துக்கு ஏலம் கேட்டார். இந்த தொகை போதாது என்றும் தொடர்ந்து ஏலம் கேட்கலாம் என ஆணையாளர் கூறினார். 

ஆனால் ஏலதாரர்கள் அனைவரும் ஏலத்தை முடித்து வைக்குமாறு கூறியதால், ஆணையாளரும் ஏலம் முடித்து வைப்பதாக கூறினார்.

Next Story