உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்


உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 3 May 2022 11:38 PM IST (Updated: 3 May 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு கேட்டு உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த ஏவலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செல்வகுமார்(வயது 25). இவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த குணசேகரன் மகள் ஜோதிராஜ்(20) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் கடந்த மார்ச் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டு ஏவலூர் கிராமத்திலேயே தங்கி இருந்தனர். இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என ஜோதிராஜின் தந்தை குணசேகரன் தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிராஜை தேடி வந்தனர். இதை அறிந்த செல்வகுமார்-ஜோதிராஜ் இருவரும் பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தனர். அவர்களை திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா அனுப்பி வைத்தார். அங்கு விசாரணைக்கு பிறகு இருவரையும் ஏவலூர் கிராமத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story