மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 3 May 2022 11:50 PM IST (Updated: 3 May 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதியதில் வாலிபர் பலியானார. மேலும், படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரவக்குறிச்சி, 
முருங்கைக்காய் லோடு ஏற்றுவதற்காக ஒரு சரக்கு வாகனம் அரவக்குறிச்சி வழியாக பழனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மாரண்டஹள்ளியை சேர்ந்த நாகராஜ் (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார். அரவக்குறிச்சியை அடுத்த வேலம்பாடி ஊராட்சி இச்சிப்பட்டி பிரிவு அருகே சரக்கு வாகனம் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பள்ளப்பட்டி கருத்தப்பா தெருவை சேர்ந்த லத்தீப் (21) தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், விபத்தில் படுகாயமடைந்த பள்ளப்பட்டி தெற்கு மந்தை தெருவை சேர்ந்த அப்பாஸ் (18), கரூர் தனியார் மருத்துவமனையிலும், அதே தெருவை சேர்ந்த உஸ்மான் (22) அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story