லாரி மீது சுற்றுலா பஸ் மோதல்; 11 பேர் காயம்
ராமநத்தம் அருகே லாரி மீது சுற்றுலா பஸ் மோதியதில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
ராமநத்தம்,
புதுச்சேரி, உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பலர் சுற்றுலா பஸ்சில் வால்பாறைக்கு சென்றனர். அங்கு சுற்றிபார்த்துவிட்டு மீண்டும் ஊருக்கு அதே பஸ்சில் திரும்பினர். ராமநத்தம் அடுத்த மா.பொடையூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சுற்றுலா பஸ் முன்னால் சென்ற லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் காயம் அடைந்த புதுச்சேரியை சேர்ந்த சங்கரன் மனைவி சுபத்ரா (வயது 32), உளுந்தூர்பேட்டை குமரகுரு மனைவி சரண்யா (30), விருத்தாசலம் பாலாஜி மனைவி வனிதா (37), புதுச்சேரி வைத்தீஸ்வரன் மனைவி ஸ்ரீபிரியா (46), விழுப்புரம் சிவஞானம் மகன் பாரிச்செல்வம் (48), விருத்தாசலம் ராமலிங்கம் மகன் பாலாஜி (23) ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
போலீசார் விசாரணை
அவர்கள் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பலத்த காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரிக் கும், சுற்றுலா பஸ் டிரைவரான கடலூரைச்சேர்ந்த வேலு மகன் பரணிதரன் (23) பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story