அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது கீழ ராஜவீதியில் போக்குவரத்து நெரிசல்


அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது கீழ ராஜவீதியில் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 4 May 2022 12:00 AM IST (Updated: 4 May 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

அட்சய திருதியை நாளில் புதுக்கோட்டையில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. கீழ ராஜ வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதுக்கோட்டை:
வாடிக்கையாளர்கள் கூட்டம்
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் மேலும் பெருகும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் அட்சயதிருதியை நாளில் தங்கம் வாங்க பொதுமக்கள் நகைக்கடைகளுக்கு படையெடுப்பது உண்டு. தங்களது வசதிக்கேற்ப நகைகளை வாங்குவது உண்டு. தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள் அதனை தவிர்த்து பிற பொருட்களையும் வாங்கலாம் என கூறப்படுவதால் அந்த பொருளையும் பொதுமக்கள் வாங்குவது உண்டு. 
இந்த நிலையில் நேற்று அட்சயதிருதியையை யொட்டி புதுக்கோட்டையில் நகைக்கடைகளில் தங்கம் வாங்க வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. நகைக்கடைகளில் முன்பு வாழை மர தோரணங்கள் கட்டியும், மின் விளக்குகளால் அலங்காரம் செய்தும் வைத்திருந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
இதேபோல ஜவுளிகள், பொருட்கள் வாங்க நேற்று கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரு சக்கர வாகனங்கள், கார்களில் வந்தவர்களால் கீழ ராஜ வீதியில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது. கீழ ராஜ வீதியில் நெல்லு மண்டி தெரு, தெற்கு ராஜ வீதி பிரியும் சாலையில் போக்குவரத்து நெருக்கடி உருவானது. 
போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். நகைக்கடைகளில் பல கோடி ரூபாய்க்கு தங்கம் விற்பனையானதாக கூறப்படுகிறது.

Next Story