புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 19 ஆயிரத்து 332 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்


புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 19 ஆயிரத்து 332 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 4 May 2022 12:00 AM IST (Updated: 4 May 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 19 ஆயிரத்து 332 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

புதுக்கோட்டை:
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 93 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 267 மாணவர்களும், 4 ஆயிரத்து 166 மாணவிகளும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 142 மாணவர்களும், 3 ஆயிரத்து 268 மாணவிகளும், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 590 மாணவர்களும், 2 ஆயிரத்து 899 மாணவிகளும் என மொத்தம் 19 ஆயிரத்து 332 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வினாத்தாள் மையங்கள்
தேர்வுக்கான வினாத்தாள்கள் பாதுகாப்பாக மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 10, 11, 12 ஆகிய வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் வந்துள்ள நிலையில், அவை அனைத்தும் மொத்தம் 36 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி. சத்தியமூர்த்தி நேற்று பார்வையிட்டார். 
அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். தேர்வு மையங்களுக்குள் மாணவர்கள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 28-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை), பிளஸ்-1 பொதுத்தேர்வு 10-ந் தேதியும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story