மைலாப்பூர் கோணாங்கண்மாயில் மீன்பிடி திருவிழா
கோணாங்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மைலாப்பூர் கிராமத்தில் உள்ள கோணாங்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஊர் முக்கியஸ்தர்கள் நடுமடையில் தேங்காயை உடைத்து சாம்பிராணி, சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர் வெள்ளை துண்டு வீசப்பட்டு மீன்பிடி திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து கண்மாயில் கூடியிருந்த பொதுமக்கள் மீன் பிடிக்க தொடங்கினர்.
பொன்னமராவதி, பிடாரம்பட்டி, ஏனாதி, கேசராபட்டி, கண்டியாநத்தம், ஆலவயல், அம்மன்குறிச்சி, அஞ்சுகுளிபட்டி, ஆரணிப்பட்டி, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஊத்தா, வலை, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன் பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. பின்னர் பிடித்த மீன்களை பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story