கணவர் திட்டியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கணவர் திட்டியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பூர்,
வேப்பூர் அருகே என்.நாரையூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகள் லட்சுமி (வயது 28). இவருக்கும் சேவூர் கிராமத்தை சேர்ந்த தினகரன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. தினகரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமி தனது கணவருக்கு போன் செய்து குடும்ப செலவிற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் லட்சுமியை தினகரன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story