திருக்கோவிலூர் எம்.எஸ். ஜூவல்லர்சில் சிறப்பு விற்பனை
அட்சய திருதியையொட்டி திருக்கோவிலூர் எம்.எஸ். ஜூவல்லர்சில் சிறப்பு விற்பனை நடைபெற்றது.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் வடக்குவீதியில் 3 அடுக்கு மாளிகையில் செயல்பட்டு வரும் எம்.எஸ். ஜூவல்லர்ஸ் நகைக்கடை மற்றும் அதன் எதிரே 2 அடுக்கு மாளிகையில் செயல்பட்டு வரும் எம்.எஸ். வெள்ளி கடையில் அட்சய திருதியையையொட்டி சிறப்பு விற்பனை நடைபெற்றது. இதையொட்டி சாதாரண நகைகளுக்கு செய்கூலி சேதாரம் இல்லாமலும், கே.டி.எம். நகைகளுக்கு குறைந்த சேதாரத்துடனும் விற்பனை நடைபெற்றது.
இதனால் திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், மணலூர்பேட்டை, திருப்பாலப்பந்தல், ரிஷிவந்தியம், தியாகதுருகம், முகையூர் அரியூர், வெறையூர் எலவனாசூர்கோட்டை, பகண்டைகூட்டுரோடு, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் கடைக்கு வந்து தங்களுக்கு தேவையான தங்கம், வைரம், வெள்ளி நகைகளை வாங்கிச் சென்றனர்.
ஏராளமான புதுமண தம்பதிகளும் நகை வாங்க வந்திருந்தனர். முன்னதாக அட்சய திருதியை சிறப்பு விற்பனையை கடையின் நிர்வாகி கோத்தம்சந்த் தொடங்கி வைத்தார். கடைக்கு வந்த அனைவரையும் கடை நிர்வாகிகள் விஜயராஜ், அர்வின் ஆகியோர் வரவேற்றனர். முடிவில் நிர்வாகி ஆகாஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story