விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
ஜோலார்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம்பட்டி சொரங்கன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 31), ஹாலோ பிரிக்ஸ் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை
இந்த நிலையில் நேற்று காலை வக்கணம்பட்டி பாரத கோவிலில் புதிய திருமண மண்டபத்தின் மேல்மாடியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து வினோத் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story