வைப்பாற்றில் தொடரும் மணல் திருட்டு


வைப்பாற்றில் தொடரும் மணல் திருட்டு
x
தினத்தந்தி 4 May 2022 12:49 AM IST (Updated: 4 May 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டையில் தொடரும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டையில் வைப்பாற்றில் கரையோர பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. வைப்பாற்றில் கரையோர பகுதிகளில் துளைபோட்டு  நூதன  முறையில் மணலை திருடி வருகின்றனர். இதனால்  மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு இதே மாதிரி மணல் திருட்டில் ஈடுபட்ட போது மண் சரிவில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இருப்பினும் மீண்டும் அதுபோன்று துளை போட்டு கொண்டு மணலை திருடி வருகின்றனர். எனவே அதிகாரிகள் கண்காணித்து மணல் திருட்டு நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story