நெமிலி வரை இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ் வெளிதாங்கிபுரம் கிராமம் வரை நீட்டிப்பு
நெமிலி வரை இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ் வெளிதாங்கிபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெமிலி
நெமிலி வரை இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ் வெளிதாங்கிபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளிதாங்கிபுரம் ஊராட்சிக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோடம்பாக்கம் வரை நடந்து சென்று, அங்கிருந்து பஸ் பிடித்து பல்வேறு இடங்களுக்கு சென்றனர். இதனால் அவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் தணிகைமலை, செல்லப்பன் உள்ளிட்டோர், அமைச்சர் ஆர்.காந்தியை நேரில் சந்தித்து பஸ் வசதி ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.
இதனை பரிசீலனை செய்த அமைச்சர், மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் சோளிங்கரில் இருந்து நெமிலி வரை இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ் 51 கோடம்பாக்கம் வழியாக வெளிதாங்கிபுரம் கிராமம் வரை நீட்டிப்பு செய்து, காலை மாலை என இரண்டு வேளையும் சென்று வர அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா நேற்று ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், மாணவர்கள், இளைஞர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story