சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருடுபோனது
காரைக்குடி,
காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டராக வேலைபார்ப்பவர் பூமிசெல்வம் (வயது 49). இவர் அரசியல் கட்சி பொதுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தார். பாதுகாப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு செல்ல அருகில் உள்ள ஓட்டல் வாசலில் நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். அப்போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து பூமி செல்வம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு போலீசார் மோட்டார் சைக்கிளை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story