மதுரையில் ஒரே நாளில் வழிப்பறியில் ஈடுபட்ட 9 பேர் கைது


மதுரையில் ஒரே நாளில் வழிப்பறியில் ஈடுபட்ட 9 பேர் கைது
x
தினத்தந்தி 4 May 2022 1:49 AM IST (Updated: 4 May 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

மதுரை நகரில் பல்வேறு இடங்களில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை,

மதுரை நகரில் பல்வேறு இடங்களில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர் வழிப்பறி சம்பவம்

மதுரை நகரில் கடந்த சில நாட்களாக கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் தங்கத்துரை மேற்பார்வையில் திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அந்த நேரத்தில் பை-பாஸ் ரோட்டில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் பாலமுருகன் (வயது 19) என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து கொண்டு சென்றனர். மேலும் அந்த பகுதியில் நுங்கு கடை வைத்திருந்த பொதும்பு செல்வத்திடம் (37) கத்தியை காட்டி 1000 ரூபாயை பறித்து சென்றது. இந்த சம்பவம் அறிந்ததும் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் 2 சம்பவத்தில் ஒரே கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது மோட்டார் சைக்கிளில் அவர்கள் செல்வது தெரியவந்தது.

வாகன சோதனை தீவிரம்

இந்த நிலையில் போலீசார் பொன்மேனி மெயின் ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் சம்மட்டிபுரம் சொக்கலிங்கநகர் சுரேஷ்குமார் மகன் முத்துக்குமார் (19), பெத்தானியாபுரம் நாகம்மாள் கோவில்தெரு ஜெயகோபால் மகன் ஜெயசுபாஷ் (19), மகேந்திரன் மகன் நவீன்பிரசாத் (19) என்பதும், அவர்கள் கத்தியை காட்டி செல்போன், பணத்தை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதும் தெரியவந்தது. பின்னர் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆயுதங்களுடன் வந்த அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையில் பழங்காநத்தம், பசும்பொன் நகர், காளியம்மன் கோவில் தெருவில் புரோட்டா கடை நடத்தி வரும் தினேஷ்குமார் (31) கடைக்கு 5 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு காரில் தப்பி செல்வதாக சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் பழங்காநத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனையும் செய்யும் போது அதில் சந்தேகப்படும்படியாக 5 பேர் இருப்பதை கண்டனர்.

ஒரே நாளில் 9 பேர் கைது

உடனே போலீசார் காரை முழுவதும் சோதனை செய்த போது அதில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதை கண்டனர். மேலும் காரில் இருந்தவர்களிடம் விசாரித்த போது நிலையூர் கீழத்தெரு, அழகுசுந்தரம் மகன் அழகு சேதுபதி (24), பாண்டியன் நகர் கணேசன் மகன் சதீஷ்குமார் (24), திருப்பரங்குன்றம் கோட்டைத்தெரு ராம்குமார் (25), திருநகர், நெல்லையப்பபுரம் சேது மகன் பாண்டித்துரை (24), துரைப்பாண்டி மகன் ஆதித்யன் (19) என்பதும், இவர்கள் தான் புரோட்டா கடையில் பணம் பறித்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
மேலும் தல்லாகுளம் போலீசார் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் நடந்து சென்ற சுயராஜ்ஜியபுரம் சலீம் (59) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2500 பறித்துச் சென்றதாக அஜி என்பவரை கைது செய்தனர். இதன் மூலம் மதுரை மாநகரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 9 பேரை ஆயுதங்களுடன் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கத

Next Story