‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 4 May 2022 2:05 AM IST (Updated: 4 May 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ேபாக்குவரத்து நெரிசல் 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகா்பகுதிக்குள் கனரக வாகனங்கள் அதிகம் ஊருக்குள் வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூாி மாணவர்களும் வேலைக்கு செல்பவா்களும் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் ெபரிதும் பாதிக்கபடுகின்றனர். எனவே நகர்பகுதிக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நாசர், கீழக்கரை. 

பொதுமக்கள் அச்சம் 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அணைப்பட்டியில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. மேலும் அருகில் அங்கன்வாடி மையமும் ஆரம்ப சுகாதார நிலையமும் இருப்பதால் இங்கு வரும் மக்கள் சாலையை கடக்க மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                 பாலமுருகன், முள்ளிப்பள்ளம். 

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரம் மேட்டுத்தெரு பகுதியில் அதிக அளவில் வெறிநாய்கள் காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் துரத்திச் சென்று பயமுறுத்தி வருகிறது. மேலும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் இருக்கையையும் கடித்து குதறுகிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.                          முத்து, வசந்தபுரம்.

ஆக்கிரமிப்பு 
 சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட சுக்கான் ஊருணியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. மழை காலங்களில் ஊருணியில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல வழியில்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பொிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                      சுவாமிநாதன், கல்லல். 

போக்குவரத்து பாதிப்பு 

ராமநாதபுரம் மாவட்டம் காரேந்தல் ஊராட்சியில் உள்ள சந்திப்பு சாலை கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை  சரிசெய்ய வேண்டும்.                                              குரு, காரேந்தல்.

சேதமடைந்த சாலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாரியம்மன் கோவிலில் இருந்து  பழைய விருதுநகர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும்  சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த வழியாக செல்லும் மாணவர்களும், பொதுமக்களும்  சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                  விநாயகமூர்த்தி, சிவகாசி.

குப்பைத்தொட்டி வேண்டும்

மதுரை மாவட்டம் ஆனையூர் 2-வது வார்டு மல்லிகா நகரில் குப்பைத்தொட்டி இல்லை. இதனால் இங்கு சாலையின் இருபுறமும் குப்பைகளை அதிக அளவில் கொட்டப்படுகிறது. தேங்கிய குப்பைகள் அள்ளப்படாமல் பலநாட்களாகி மலை போல காட்சியளிக்கிறது. போக்குவரத்திற்கும், சுகாதாரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் இந்த குப்பைகளை அகற்றி இப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                குமார், மதுரை. 

தொற்றுநோய் பரவும் அபாயம் 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 24-வது வார்டு முருகன் காலனியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதோடு மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து சாலையில் தேங்குவதால் அப்பகுதியில் கொசுக்கள் உருவாகி நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துக்குமார், சிவகாசி. 

நிழற்குடை தேவை
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு எல்.ஐ.சி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால் இங்கு வரும் பெண்களும் முதியவர்களும் ெகாளுத்தும் வெயிலில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் பயணிகளுக்கான நிழற்குடை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                   சிவா, மதுரை. 

விபத்தை ஏற்படுத்தும் நாய்கள் 
மதுரை கடச்சனேந்தல் எல்.கே.டி. நகர் மற்றும் வைரமணி நகர் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கே அச்சப்படுகின்றனர். மேலும் வாகனத்தில் செல்பவர்களையும் நாய்கள் துரத்துவதால் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. ெபாதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிக்குமாா், மதுரை. 

Next Story