ஒரே நாளில் 3 பேர் தற்கொலை


ஒரே நாளில் 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2022 2:09 AM IST (Updated: 4 May 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் சபரீஷ் (வயது 25), தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இதனால் சபரீஷ் மனவேதனையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சபரீஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பாா்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆசாரிபள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சபரீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெற்றோர் கண்டிப்பு
இதே போல வடசேரி கொம்மண்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வின்சென்ட் ராஜன் (37) என்பவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இவர் தினமும் மதுக்குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் வாத்தியார்விளையில் வசித்து வந்த ரகுராமன் (31) என்பவர் வீட்டில் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் செல்போனில் நீண்ட நேரம் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்ததாகவும், அதை பெற்றோர் கண்டித்ததால் மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக வடசேரி போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story