மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன
அய்யம்பேட்டை
அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதகடி பஜார் குடமுருட்டி ஆற்றின் பாலத்தின் அருகே மணல் ஏற்றிய மாட்டு வண்டிகள் வரிசையாக வந்து கொண்டிருந்தன. அந்த மாட்டு வண்டிகளை போலீசார் நிறுத்த முயன்றபோது அதனை ஓட்டி வந்தவர்கள் கீழே குதித்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் அந்த மாட்டு வண்டிகளில் போலீசார் சோதனையிட்டபோது அவற்றில் குடமுருட்டி ஆற்றிலிருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து அந்த 6 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story