வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 4 May 2022 2:20 AM IST (Updated: 4 May 2022 2:20 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டார்

திருக்காட்டுப்பள்ளி
பூதலூர் அருகே உள்ள சொரக்குடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 26). விவசாயி. இவரும், இவரது தம்பி மதனும்(24) வழக்கு ஒன்றிற்காக தஞ்சை கோர்ட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ராயமுண்டான்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகே அவர்கள் வந்தபோது முன் விரோதம் காரணமாக பூதலூர் கொடும்புறார் நகரை சேர்ந்த பிரகாஷ் (28), வெற்றி என்கிற இளவரசன் (29) உள்ளிட்ட 3 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து அவர்களை வழிமறித்து பிரகாசை தலை மற்றும் கையில் அரிவாளால் வெட்டினார்கள். மேலும், மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில், பலத்த காயமடைந்த பிரகாஷ் தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story