ரமலான் விழாவில் கோஷ்டி மோதல்; 12 பேர் படுகாயம்


ரமலான் விழாவில் கோஷ்டி மோதல்; 12 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 May 2022 2:32 AM IST (Updated: 4 May 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளேகால் அருகே ரமலான் விழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

கொள்ளேகால்:கொள்ளேகால் அருகே ரமலான் விழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

 கோஷ்டி மோதல்

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சாமந்திகெரே பகுதியில் நேற்று புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.  இதையொட்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. 

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு, ஒருவர் வாழ்த்துகளை கூறினர்.

 12 பேர் படுகாயம்

 இந்த சந்தர்ப்பத்தில் திடீரென இரு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கல் வீசியும், கட்டையாலும் தாக்கி கொண்டனர். இதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி கொள்ளேகால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். 

பின்னர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொள்ளேகால் முன்னாள் நகரசபை உறுப்பினர் நாசீர் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் கீஜர் தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது தெரியவந்தது. ஆனால் அவர்கள் எதற்காக மோதி கொண்டனர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கொள்ளேகால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story