கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தென்காசி அருகே கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள சாம்பவர்வடகரை ரெட்டை தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கார்த்திக் செல்வம் என்ற ஜின்னா (வயது 19). இவர் சாம்பவர் வடகரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்தார். இதுகுறித்து சாம்பவர் வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வந்த அவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மீண்டும் அவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து அவர் இந்த செயலில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஏற்று, கார்த்திக் செல்வத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை இன்ஸ்பெக்டர் வேல்கனி பாளையங்கோட்டை சிறையில் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story