குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் ரூ.4 லட்சம் தங்க நகைகள் அபேஸ்
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச்சென்ற 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு: பெங்களூரு கிரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒசகெரேஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் சவுபாக்யா (வயது 30). இந்த நிலையில் கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி சவுபாக்யா வீட்டிற்கு வந்த ஒரு பெண் வீட்டு வேலை ஏதாவது இருந்தால் தாருங்கள் என்று கேட்டு உள்ளார். ஆனால் சவுபாக்யா அந்த பெண்ணிடம் வேலை இல்லை கூறிவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சவுபாக்யா வெளியே சென்று இருந்தார்.
அப்போது அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியவர்கள், உடனடியாக வீட்டிற்கு வரும்படி கூறிவிட்டு இணைப்பை துண்டித்தனர். இதனால் சவுபாக்யா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பு நின்ற 2 பெண்கள் சவுபாக்யாவுக்கு குளிர்பானம் கொடுத்தனர். அதை குடித்து சவுபாக்யா மயங்கியதும் வீட்டில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை 2 பெண்களும் அபேஸ் செய்துவிட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story