சிவகிரி அருகே சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை; 2 ஏக்கரில் வாழைகள் சாய்ந்தன
சிவகிரி அருகே சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. 2 ஏக்கரில் வாழைகள் சாய்ந்தன.
சிவகிரி
சிவகிரி அருகே சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. 2 ஏக்கரில் வாழைகள் சாய்ந்தன.
ஆலங்கட்டி மழை
ஈரோடு மாவட்டம் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கந்தசாமிபாளையம், வேட்டுவபாளையம், மோளவிநாயகன்புதூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வானில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. சில நிமிடங்களில் பலத்த இடி-மின்னல், சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது சுமார் 45 நிமிடம் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
சூறாவளிக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மோளவிநாயன்புதூரில் நல்லிமரத்து தோட்டம் என்ற இடத்தில் நடராஜன் என்ற விவசாயி பயிரிட்டு இருந்த 2 ஏக்கர் வாழைகள் சாய்ந்தும், முறிந்தும் நாசம் அடைந்தன.
மரம் விழுந்தது
மேலும் மோளவிநாயகன்புதூாில் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, ரோட்டு ஓரம் இருந்த மின்கம்பம் மீது விழுந்தது. இதில் மின்கம்பம் உடைந்தது. நல்லவேளையாக அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள், தென்னை மரத்தை அப்புறப்படுத்தினார்கள். இதேபோல் பல இடங்களில் தென்னை மரங்கள் சாய்ந்தன.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் திடீரென சூறாவளிக்காற்று வீசியது. இதில் கொளாநல்லி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் வகிதா கனி என்பவரின் வீட்டின் முன்புற கூரை காற்றின் வேகத்தில் ஈரோடு கரூர் மெயின் ரோட்டில் தூக்கி வீசப்பட்டது. மற்றும் அருகில் கருப்பணன் என்ற விவசாயி பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் 50-க்கும் மேற்பட்டவை முறிந்து விழுந்து நாசம் ஆனது.
Related Tags :
Next Story