‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
பழுதடைந்த சாலை
ஈரோடு முனிசிபல் காலனியில் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. ஆங்காங்கே சாலையின் குறுக்கே பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை சீரமைக்கப்படவில்லை. எனவே பழுதடைந்த இந்த சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவிதா, ஈரோடு.
ரோடு சீரமைக்கப்படுமா?
கோபியில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் கூட்டுறவு விற்பனை சங்கம் எதிரில் (குப்பம்மாள் லே-அவுட் காலனி) ஒரு காலனி ரோடு வருகிறது. அந்தக் காலனி ரோட்டில் பல இடங்களில் குழியாக காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.
நாதன், கோபி.
மின்விளக்குகள் ஒளிரவில்லை
மொடக்குறிச்சி ஒன்றியம் 46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய செட்டிபாளையம் கிராமத்தில் முனியப்பன் கோவில் செல்லும் வீதியிலும், நல்லம்மாள் நகர் செல்லும் வீதியிலும் மின்விளக்குகள் ஒளிரவில்லை. இதனால் இரவு நேரத்தில் பெண்களும், முதியவர்களும் வீதியில் நடமாட அச்சப்படுகிறார்கள். எனவே மின்வாரிய அதிகாரிகள் இதை உடனே சரிசெய்யவேண்டும்.
பொதுமக்கள், பெரியசெட்டிபாளையம்.
ஆபத்தான குழி
கோபி திரு.வி.க வீதி 2-ல் நான்கு முனை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் சாக்கடை அடைப்பு சரிசெய்ய 3 மாதங்களுக்கு முன் குழி தோண்டப்பட்டது. அந்த குழியை இன்னும் மூடவில்லை. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்லும் சிறுவர், சிறுமிகள் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே அந்த குழியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே மூடவேண்டும்.
பொதுமக்கள், திரு.வி.க. வீதி.
கழிவுநீரால் சுகாதாரக்கேடு
ஈரோடு பஸ்நிலையம் அருகே சத்தி ரோட்டில் சாக்கடை பணிக்காக குழிதோண்டினார்கள். அதன்பின்னர் அதை சரிசெய்யாமல் சென்றுவிட்டார்கள். தற்போது அந்த குழியில் கழிவுநீர் தேங்கி சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருகே உள்ள கடைகளுக்கு செல்லும் பாதையும் தடைபட்டுள்ளது. எனவே விரைந்து இதை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஆவன செய்யவேண்டும்.
தருன்குமார், ஈரோடு.
பள்ளத்தில் மழை வெள்ளம்
கவுந்தப்பாடியில் இருந்து கோபி செல்லும் ரோட்டில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிசெய்யப்படாமல் அப்படியே உள்ளது. கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு பெய்த மழையால் அதில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனே இந்த பள்ளத்தை சீரமைக்கவேண்டும்.
லோகநாதன், பாலப்பாலையம்.
டவுன்பஸ் வேண்டும்
ஊஞ்சலூரில் இருந்து ஈரோட்டுக்கு ஏராளமான பெண்கள் நாள்தோறும் வேலைக்கு சென்று வருகிறார்கள். இதேபோல் கல்லூரிக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் மாணவ-மாணவிகள் ஈரோடு சென்று வருகிறார்கள். ஆனால் ஊஞ்சலூரில் இருந்து ஈரோட்டுக்கு ஒரே ஒரு டவுன் பஸ்தான் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் நெருக்கியடித்து செல்கிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி கூடுதலாக டவுன் பஸ்கள் இயக்கவேண்டும். அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
அருள்ெமாழி பெருமாள், ஊஞ்சலூர்.
Related Tags :
Next Story