உத்தமசோழபுரம் சித்தலிங்கேஸ்வரர் கோவிலில் கரடி சித்தருக்கு சிறப்பு பூஜை


உத்தமசோழபுரம் சித்தலிங்கேஸ்வரர் கோவிலில் கரடி சித்தருக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 4 May 2022 3:39 AM IST (Updated: 4 May 2022 3:39 AM IST)
t-max-icont-min-icon

உத்தமசோழபுரம் சித்தலிங்கேஸ்வரர் கோவிலில் கரடி சித்தருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆட்டையாம்பட்டி:
சேலம் அருகே உத்தமசோழபுரம் சித்தலிங்கேஸ்வரர் கோவிலில் சித்தர் சிறப்பு தின விழா 23-வது ஆண்டாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவிலில் உள்ள கரடி சித்தருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு களி பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் பம்பை வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கரடி சித்தர் கோவிலில் இருந்து புறப்பட்டு சத்யா கார்டன், கரபுரநாதர் கோவில், ராஜவீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தார். நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story