சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- 81 பேர் மீது வழக்குப்பதிவு


சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- 81 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 4 May 2022 4:54 AM IST (Updated: 4 May 2022 4:54 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கட்சி நிர்வாகிகள் 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சேலம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி சேலம் மாவட்ட அமைப்பாளர் சதீஸ்குமார் மீது போலீசார் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், அதை ரத்து செய்யக்கோரி சேலத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வன்னியரசு தலைமை தாங்கினார். சேலம் மாநகர பொருளாளர் காஜாமைதீன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், கட்சி நிர்வாகி மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், காவல்துறையில் நிலவும் சாதிய போக்கை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசாரை தரக்குறைவாக பேசியதாக, கிராம நிர்வாக அதிகாரி கோபிநாத், டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் கூட்டம் கூடியது, பொதுமக்களுக்கு இடையூறாக வாகனத்தை சாலையின் நடுவில் நிறுத்தி மறித்தல், தகாத வார்த்தைகளால் பேசியது உள்பட 5 பிரிவுகளின் கீழ் கட்சியின் பொருளாளர் காஜாமைதீன், மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்பட 81 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story