ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு-சான்றிதழ்
ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு-சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்சி:
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகளைத் தமிழ் இணையக் கல்வி கழகம் சார்பில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு குறளோவியம் என்ற பெயரில் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் சிறந்த 365 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில், இப்போட்டிகளில் சிறப்புப் பரிசு பெற்ற சிறுகனூர் அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் கா.சதீஷ், திருச்சி ஜே.ஜே. பொறியியல் கல்லூரி மாணவர் அ.ஷாம் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரத்துக்கான காசோலைகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் சிவராசு வழங்கினார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 16 பேருக்கு ஊக்கப்பரிசாக ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அம்பிகாபதி, செய்தி மக்கள் தொடர்பு உதவி இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story