விபத்தில் பெண் பலி


விபத்தில் பெண் பலி
x
தினத்தந்தி 4 May 2022 5:01 AM IST (Updated: 4 May 2022 5:01 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் பெண் உயிரிழந்தார்.

திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் ராயல்கார்டன் பகுதியை சேர்ந்த முத்துக்குமாரின் மனைவி விஜயலட்சுமி(வயது 27). திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அருகே ஆர்.எஸ்.கே. நகரை சேர்ந்த சதீஸ்பாபுவின் மனைவி பிரியா(40). பொன்மலை ரெயில்வே பணிமனையில் வேலை செய்து வருகிறார். தோழிகளான இருவரும் நேற்று மதியம் ஸ்கூட்டரில் திருச்சி மத்திய பஸ்நிலையம் பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் சென்ற பஸ்சில் மோதியது. இதில்  விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். பிரியாவுக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story