வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
பொத்தனூர் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:-
பொத்தனூர் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்
பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் தேவராயசமுத்திரம் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது. சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் தேரில் எழுந்தருளினார். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. இதில் பொத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
மஞ்சள் நீராடுதல்
இன்று அழகு போடுதல், அக்னிச்சட்டி எடுத்தல் மற்றும் பொங்கலிடுதல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், முத்துப்பல்லக்கில் அம்மன் முக்கிய வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், ஊர் காரியக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story