எண்ணூரில் மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிய கணவன், மகன் கைது


எண்ணூரில் மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிய கணவன், மகன் கைது
x
தினத்தந்தி 4 May 2022 8:00 AM IST (Updated: 4 May 2022 8:00 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூரில் மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிய கணவன், மகனை போலீசார் கைது செய்தனர்.

'திருவொற்றியூர்,

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 120-வது பிளாக்கில் வசித்து வருபவர் முருகன் (வயது 47). இவரது மனைவி ஷகீலா (40) இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கணவன் வீட்டில் இல்லாத போது வீட்டருகே வசித்து வரும் மணிகண்டன் (28) என்பவருடன் நெருங்கி ஷகீலா பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் முருகன், தனது மகன் வினோத் மற்றும் மருமகன் அருண்குமார் ஆகியோருடன் சேர்ந்து கள்ளக்காதலன் மணிகண்டன் வீட்டுக்குச் சென்று கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷகீலாவின் கணவர் முருகன், மகன் வினோத், மருமகன் அருண்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story