பெரியபாளையத்தில் உரக்கடையில் ரூ.2 லட்சம் திருட்டு


பெரியபாளையத்தில் உரக்கடையில் ரூ.2 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 4 May 2022 11:34 AM IST (Updated: 4 May 2022 11:34 AM IST)
t-max-icont-min-icon

பெரியபாளையத்தில் உரக்கடையில் ரூ.2 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரியபாளையம்,

எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் கிரகபிரவேசம் நகரை சேர்ந்தவர் தேன்கனி (வயது 38). இவர் பெரியபாளையம் பஜாரில் செங்காத்தாகுளம் கூட்டுச்சாலையில் உரக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடையில் விற்பனையான ரூ.2 லட்சத்தை கல்லாவில் வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் மேற்கூரையான சிமெண்டு் ஓட்டை பிரித்துவிட்டு அதன் வழியாக உள்ளே இறங்கியுள்ளனர் என தெரியவந்தது. 

பின்னர், கல்லாவில் இருந்த ரூ.2 லட்சம் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தேன்கனி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். கைரேகைகளை பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story